நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 15-ம் தேதி மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து உதகை வருகை புரிந்தார்.
நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்கண்காட்சி இம்மாதம், 15 ம் தேதி முதல், 21ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

சுற்றுலா பயணிகள் அனைவரும் மலர் கண்காட்சியை ரசிக்கும் வகையில், இம்மாதம், 15-ம் தேதி துவங்கி, 25-ம் தேதி வரை, கண்காட்சி நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 15-ம் தேதி உதகை மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தடைந்தார். மேலும் கோவையில் இருந்து தமிழக முதல்வர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம் வந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வந்தடைந்தார். முன்னதாக குஞ்சபானை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா ஆகியோர் வரவேற்றனர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வழியெங்கும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பு ஏற்றுக் கொண்ட தமிழக முதல்வர் பின்பு அங்கிருந்து தமிழகம் சென்றார்.
மேலும் அதன் பின்பு எதிர் வரும் 15 ஆம் தேதி உதகை மலர் கண்காட்சியை திறந்து வைக்கும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
மேலும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்குகிறார். பின்பு முதுமலை மற்றும் தொட்டபெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றுகிறார். இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பு சாலை மர்க்கமாக கோத்தகிரி சென்று பின்பு மேட்டுப்பாளையம் வழியாக வரும் 16 தேதி இரவு கோவையில் இருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.
முதல்வர் வருகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டத்தில் இருந்து 1500 காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.