விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டியை சேர்ந்த செல்வமணி (வயது 38 ). தாயில்பட்டி பகுதியில் சொந்தமாக ஆட்டோ வைத்து பணி செய்து வருகிறார். கடந்த நான்கு நாட்களாக திடீரென காணாமல் போனதால் அவர் குடும்பத்தினர் வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருந்தனர். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தன் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் அடையாளம் தெரியாத நபர் உடலை கைப்பற்றி பல்வேறு போலீஸ் ஸ்டேஷனுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. செல்வமணி குடும்பத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டது. அவர்களும் இறந்த நபரின் உடலை பார்த்து செல்வமணி தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

காணாமல் போன செல்வமணி உடல்நலக் குறைவினால் இயற்கையாக இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.