• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சேலம் அருகே பெற்றோரை தேடும் 41 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்

சேலம் அருகே 41 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி திருமணம் செய்து கணவனுடன் வந்து பெற்றோரை தேடிவருகிறார்.
சேலம் அருகே உள்ளது கருப்பூர். இந்த பகுதியில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்ற சிறுமி தற்போது டென்மார்க்கில் வசித்து வருகிறார்.திருமணம் செய்து கொண்ட அவர் தனது பெற்றோரை தேடி சேலம் வந்தார்.டென்மார்க் பிலாங்சர் டார்பன் பகுதியை சேர்ந்தவர் பேட்டரி. 45 வயதான இவரது மனைவி பெயர் லிசா (வயது44 )இவர் சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து உள்ளார்.

இவர் 3 வயது குழந்தையாக இருந்த போது சென்னை பல்லாவரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் சில்ட்ரன்ஸ் ஹோமில் விடப்பட்டு உள்ளார். பிறகு விசாவை அங்கு இருந்து டென்மார்க்கை சேர்ந்த சுற்றுலாப் பயணி ராஜ்முஷன் என்பவர் தத்து எடுத்துச் சென்று அங்கு வளர்த்தார். பிறகு லிசா, பேட்டரி என்பவரை திருமணம் கொண்டார். தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது லிசா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை காண வேண்டும் .தன்னுடைய பிறப்பிடத்தை காண வேண்டும் என ஆவல்காரணமாக லிசா வும் அவரது கணவர் பேட்டரிக்கும் டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்தனர். பிறகு இவர்கள் பூனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அஞ்சலி பவார் என்பவரின் உதவியுடன் இன்று சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதிக்கு வந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை தேடினர். லிசா காணாமல் போன போது மீனாட்சி என்ற பெயரில் இருந்ததாகவும் ,இவரது பூர்வீக ஊர் கபூர் அல்லது கருப்பூர் என ஞாபகம் இருந்ததாகவும் இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேடி வருவதாகவும் கூறினர் .
மேலும் கருப்பூர் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சென்று தனக்கு இளம் வயதில் பார்த்த இடம் , சுற்றித் திரிந்த பகுதிகள் நினைவிற்கு வருகிறதா என லிசா தேடி பார்த்தார். ஆனால் அவருக்கு பழைய இடங்கள் தெரியவில்லை.பிறகு லிசா கருப்பூர் காவல் நிலையம் சென்றுதனது பெற்றோர் மற்றும் உறவினர்களின் பெயர் மற்றும் அடையாளங்களை கூறி அவர்களது தகவல்களை விசாரித்து தருமாறு தெரிவித்தார்.இதன் பிறகு லிசா அவரது செல் எண் மற்றும் விலாசத்தை கருப்பூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துவிட்டு அவரது கணவருடன் புறப்பட்டுச் சென்றார்.இதன்பேரில் தற்போது கருப்பூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள் .