• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

ByA.Tamilselvan

Oct 30, 2022

தேவர் ஜெயந்தி-குருபூஜைவிழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.