மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவரின் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையிலான திமுக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,

தொடர்ந்து முதல்வர் அறிவித்தபடி பி.கே. மூக்கையாத்தேவர் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ள இடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையிலான அதிகாரிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு.
கலைஞர் ஆட்சியில் இருந்தபோது தென் மாவட்டத்தில் 3 கல்லூரிகள் உருவாக காரணமாக இருந்தவர்.
தமிழக முதலமைச்சர் திராவிட மாடல் நாயகன் அவர்கள் சட்டமன்றத்தில் கடந்த 03.07.2025-ம் தேதி 110 விதியின் கீழ் மூக்கையா தேவருக்கு நினைவு மண்டபம் அமைக்க கோரி அதை மணிவண்டமாகவும், திருஉருவசிலையும் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த பணிக்கு ஆறரை கோடி நிதி ஒதுக்கி விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது .
கல்வித்தந்தை பி.கே. மூக்கையாதேவருக்கு நினைவு மண்டபம் கட்ட எந்த இடம் சிறந்தது என்று நாங்கள் தேர்வு செய்ய இருந்தபோது அவர் படித்த இந்த அரசு பள்ளியிலேயே அவரது மணிமண்டபம் கட்டினால் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் இங்கே கட்டப்பட உள்ளது., முதல்வர் விரைந்து முடிக்க வேண்டும் என சொல்லியுள்ளதால் நானே நேரில் வந்து ஆய்வு செய்துள்ளேன்,
காக்கா உக்கார பணம்பழம் விழுவதற்கும் பொருத்தமாக இருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப நான் இந்த மணிமண்ட பணி நடைபெற உள்ளது, இன்று முக்கையாதேவருக்கு என் நினைவு நாள், எனவே இங்கு வந்து மூக்கையாதேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, இந்த மணிமண்டபம் அமைய உள்ள இடத்தை பார்வையிட வந்துள்ளேன்.
தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள், அந்த அந்த பகுதியில் மக்களுக்காக விழிப்புணர்வை உருவாக்கிய தலைவர்கள், பின்தங்கிய மக்களுக்காக தொண்டாற்றிய தலைவர்கள் இப்படி மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்ட தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பது, சிலைகள் அமைப்பது என்ற அடிப்படையில் சிறப்பு சேர்த்து வருகிறார்., அந்த பட்டியலில் தான் பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபமும், சிலையும் அமைக்கப்பட உள்ளது.
இந்த இடத்தில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் பி.மூர்த்தி மூலம் வைத்துள்ளார்கள் பரிசீலனைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
முச்சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்த இந்த மதுரை மண்ணில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரிலே ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் நூலகம் கல்லூரி மாணவர்களுக்கும், அரசு போட்டி தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்து இன்று 21 லட்சம் பேர் படித்துள்ள சிறந்த நூலகமாக விளங்குகின்றது என பேசினார்.













; ?>)
; ?>)
; ?>)