பொள்ளாச்சியில் மினிஸ்டர் ஒயிட்-ன் 58வது பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட்டது
பிரபல காட்டன் துணி நிறுவனமாக மினிஸ்டர் ஒயிட் பொள்ளாச்சியில் 58-வது பிரத்யேக ஷோரூமை இன்று திறந்தது. பொள்ளாச்சி, உடுமலை சாலையில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம், மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் விரிவாக்கத்தில் ஒரு முக்கியமான கட்டமாக அமையபெற்றுள்ளது.


இந்த ஷோரூமை வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சின்னசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அதை வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறங்காவலர் நித்தியானந்தன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக உலக சமூக சேவை மையத்தின் கிராம சேவைத் திட்ட இயக்குனர் முருகானந்தம், வியாபாரி சங்க தலைவர் சக்திவேல், அரிமா சங்க பிரமுகர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னணி தொழில்துறையினர் பங்கேற்றனர்.
வட இந்தியா மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா போன்ற உலக சந்தைகளிலும் விரிவாக்கத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




