தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க , தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தைப்பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்புடன் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ.3000 மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, போக்கு வரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2,51,161 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்குவதை துவக்கி வைக்கும் வகையில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள 16 வது வார்டுக்குட்பட்ட அமராவதி-1 பொதுவிநியோகத் திட்ட நியாய விலைக்கடை மற்றும் உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உடையார்பாளையம்-1 பொது விநியோகத்திட்ட நியாய விலைக்கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, ஜெயங் கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட 481 நியாய விலைக்கடைகளில் உள்ள 2,51,161 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்ப டவுள்ளது. இதற்காக அரியலூர் மாவட்டத்திற்கு 2,51,161 பன்னீர் கரும்புகள் அரியலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்து அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கம் ரூ.3000 வழங்கிட அரியலூர் மாவட்டத்திற்கு ரூ.75.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் திருநாளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகளும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா,ஒன்றிய திமுக செயலாளர் தனசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி எம் ஷாஜகான் ,அரியலூர் நகர திமுக செயலாளர் இரா முருகேசன், நகர்மன்றத் தலைவர் சாந்தி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட் சியர்கள் செல்வி.பிரேமி (அரியலூர்), ஆர் ஷீஜா (உடையார்பாளையம்), பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் செல்வி.சாய்நந்தினி, உடையார்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் மலர்விழி, வருவாய் வட்டாட்சியர்கள் முத்து லெட்சுமி, சம்பத், மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,




