• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

துணை மின் நிலையம் தரம் உயர்த்தும் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் சா.சி.சிவசங்கர்..,

ByT. Balasubramaniyam

Feb 5, 2026

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.164 இலட்சம் மதிப்பீட்டில் உடையார்பாளையம் வார்டு எண்.2, 3, 4, 5, 6, 9 மற்றும் 15-ல் அமைந்துள்ள பல்வேறு தெருக்களில் தார் சாலைகள் அமைத்தல் பணியினையும் மற்றும் செந்துறை ஊராட்சியை சுற்றியுள்ள 21 கிராமங்களில் உள்ள சுமார் 14,500 மின் நுகர்வோர்களுக்கு பயனளிக்கும் வகையில் செந்துறை ஊராட்சியில் துணை மின் நிலையத்தினை ரூ.26.38 கோடி மதிப்பில் 110/33 KV தரம் உயர்த்தும் பணியையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, தலைமையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் / பெரம்பலூர் மின்பகிர்மான வட்டம் மேகலா, உடையார் பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், செயற்பொறியாளர் பொது பரமேஸ்வரி, உடையார்பாளையம் செயல் அலுவலர் கண்ணன், ஒன்றிய திமுக செயலாளர்கள் தனசேகர், ரெ.அசோகச் சக்கரவர்த்தி , பூ ,செல்வராஜ், வி.எழிலுமாறன் ,பொன் செல்வம்,வருவாய் வட்டாட்சியர்கள் சம்பத் , வேலுமணி இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.