அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு 05 அரசு வாகனங்கள் வழங்கல். அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தீவுத்திடலில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.13.73 கோடி மதிப்பீட்டில் 155 புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்ததை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , அரியலூர் மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சி யர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 05 புதிய வாகனங்களுக்கான சாவியினை, மாவட்ட கலெக்டர் பொ.இரத்தின சாமி தலைமையில்,வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா,அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர் .ஷீஜா, செல்வி.பிரேமி, மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




