• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சுற்றுலா தலங்களில் முக கவசம் கட்டாயம் அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கன்னியாகுமரி உட்பட அனைத்து சுற்றுலா மையங்களிலும்
முகக்கவசம் கட்டாயம் என்று சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் சம்பந்தமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் பெரும் திரளாக குவிந்து வருகின்றனர்.
கன்னியாகுமரிக்கு கடந்த ஐந்து நாட்களில் மட்டுமே 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகில் பயணித்து. கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்துள்ளார்கள் என படகு துறை அதிகாரி தெரிவித்தார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பொது இடங்களில் நடமாடவேண்டும்.முக கவசம் அணியாமல் வரும் அனைவருக்கும் முக கவசம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன். அனைத்து சுற்றுலா தலங்களிலும் கிருமி நாசினிகள் வைக்கவும், கை கழுவவும் அறிவுறுத்தப்படும் என்று
தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால். மீண்டும் புதிய வகை கொரோனாவால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என மருத்துவத்துறை அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் இது குறித்து கூடுதல் அறிக்கையாக. தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என்பது வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண படகில் பயணப்பட நீண்ட வரிசையில் காலை முதலே காத்து நிற்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளில் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் செல்கின்றனர். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இல்லையென்றால் கொரோனாவின் பாதிப்புக்கு உள்ளாக சூழ்நிலை உருவாகும் என்றார்.