தமிழக சட்டசபை தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் திருமயம் தொகுதியில் அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சை களைகட்டியது.

திருமயம் தொகுதியில் திமுக சார்பில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி 3-வது முறையாக களம் காண்கிறார். இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் உற்சாகமாக ஊர்வலமாக வந்த அவர், திருமயம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமாலிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதேபோல், அதிமுக சார்பில் 3-வது முறையாக களம் இறங்கும் பி.கே.வைரமுத்து, தனது கட்சித் தொண்டர்கள் புடைசூழ வந்து மனுத்தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லெட்சுமி சிவராமனும் இன்று தனது மனுவை சமர்ப்பித்தார்.
.
ஒரே நாளில் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் மனுத்தாக்கல் செய்ததால், திருமயம் நகரம் முழுவதும் கட்சித் தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் கட்சி கொடிகளும், கோஷங்களும் எனத் தொகுதி முழுவதும் தேர்தல் ஜூரம் தொற்றிக்கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

முக்கிய வேட்பாளர்கள் மீண்டும் மோதுவதால் திருமயத்தில் இப்போதே போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.



