• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

செயல்பாட்டு அறிக்கையை சமர்பித்த அமைச்சர்

ByKalamegam Viswanathan

Apr 17, 2023

கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை தமது செயல்பாட்டு அறிக்கையை, தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வரும் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை & புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன்.
மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் மே-நவம்பர் 2022 செயல்பாட்டு அறிக்கையினை, பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டு, விநியோகத்தை துவக்கி வைத்தார்.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆண்டுக்கு இரு முறை இதே போல தாம், மக்களுக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு அச்சிட்டு, அந்த பிரதிகளை, மதுரை மத்திய தொகுதி மக்களிடம் வழங்கி வருகிறார்.
அமைச்சரின் இந்த செயல்பாடு, தொகுதி மக்களை மிகவும் கவர்ந்துள்ளதாம்.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனி கவனம் செலுத்தி, மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில், குழாய்கள் பதிக்க இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு, குழாய்கள் பதித்தும் கூட தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் , பாதசாரிகளும், இருசக்கர வாகனத்தில் வருவோரும், தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.
இந்த சாலைகளை துரிதமாக, மாநகராட்சி, சீரமைக்க , அமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
மதுரை அண்ணாநகர் கோமதிபுரம், மேலமடை, வீரவாஞ்சி, சௌபாக்யா, குருநாதன் தெரு, அல்லி வீதி, ஜூப்பிலி டவுன் ஆகிய பகுதிகளில், குழாய்கள் பதிக்க சாலைகளை தோண்டிய மாநகராட்சியினர், சாலைகளை சீரமைக்க தாமதிப்பதாக, குடியிருப்போர் கவலை தெரிவிக்கின்றனர். ஆகவே, தமிழக நிதி அமைச்சர், தனி கவனம் செலுத்தி, குழாய் பதிக்க தோண்டிய சாலைகளை விரைவாக சீரமைக்க, இப் பகுதி மக்கள் கோரியுள்ளனர்.