• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காந்திஜெயந்தியையொட்டி கன்னியாகுமரியிலுள்ள காந்திமண்டபத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் மாலையணிவித்து மரியாதை!..

மஹாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டிலுள்ள காந்தி மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் காந்தியடிகளின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த பீடத்தில் மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்டைகளை பார்வையிட்டார். பின்னர் ஆபூர்வ ஒளியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் மாவட்டம் முழுவதும் மழை மேகங்கள் சூழ்ந்ததால் ஆபூர்வ ஓளி தென்படவில்லை. இதனால் ஆபூர்வ ஓளி பார்க்க காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அதேபோல் மறைந்த காமராஜரின் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியிலுள்ள காமராஜர் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் மனோதங்கராஜ் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட் சுஷ்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.