பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமிபுரம் ராணுவ வீரர் சரண் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

அவரது உடல் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்திற்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி பவித்ரா( 24) என்ற மனைவியும் 11 மாத பெண் குழந்தை உள்ளனர் .ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாமில் 54. ஆர்.ஆர். பிரிவில் பணிபுரிந்து வந்தார். நடைபெற்ற ஆபரேஷன் சிந்துரிலும் பணிபுரிந்துள்ளார்.

கடந்த 22ஆம் தேதி பணியில் இருந்த போது சரணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். . சரண் குடும்பத்தினருக்கு வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் ஆறுதல் கூறினார்.