• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மினி பஸ் டிரைவர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்…

சாத்தூர் என்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் ராம்குமார் (25). மினி பஸ் டிரைவரான இவர் நேற்று மதியம் 12:45 மணிக்கு என். மேட்டுப்பட்டியில் பயணிகளை இறக்கிவிட்டு கீழே இறங்கிய போது, அங்கு டூவீலரில் வந்த மூவர் அவரை இரும்பு கம்பியால் அடித்து உதைத்து தாக்கினர்.

பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை அடித்து உதைத்தவர்கள் மக்கள் வருவதை பார்த்து டூவீலரில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். அப்போது வந்த சாத்தூர் தாலுகா போலீசார் டூவீலர் எடுத்து யார் என்று விசாரித்து வருகின்றனர்.