கரூர் உப்பிடமங்கலம் அருள் தரும் கிளிசேர்மொழி மங்கை உடனமர் அருள்மிகு அடியார்க்கு எளியர் ஆலய சித்திரை மாத பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
கரூர் உப்பிடமங்கலம் அருள்தரும் கிளிசேர் மொழி மங்கை உடன்மா் அருள்மிகு அடியாருக்கு எளியர் ஆலய சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு உப்பிடமங்கலம் விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் தீர்த்த குடம் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது.
சித்திரை மாதம் என்றாலே பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் உப்பிடமங்கலம் அருள்தரும் கிளிசேர் மொழி மங்கை உடன்மர் அருள்மிகு அடியாருக்கு எளியர் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, முதல் நாள் நிகழ்ச்சி யாக உப்பிடமங்கலம் விநாயகர் ஆலயத்தில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தனர் .
அதைத் தொடர்ந்து உற்சவர் சுவாமி முன் செல்ல, கோலாட்டம் ஆடிய படி மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதியில் வழியாக பால்குடம் ஊர்வலம் வந்தது. தொடர்ந்து ஆலயம் வந்த பிறகு பக்தர்கள் அவர்களாகவே மூலவர் கருவறைக்கு சென்று தங்களை திருகரங்களால் தாங்கள் கொண்டு வந்த பாலால் சிறப்பு அபிஷேகத்தை நடத்தினார்.
அதை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று, அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.














; ?>)
; ?>)
; ?>)