காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர் சாலை, தென்கரை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ யோகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோட்டுச்சேரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஏராளமான பகதர்கள் பால்குடம் எடுத்து ஸ்ரீ யோகேஸ்வரி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு மஞ்சள், திரவியபொடி, பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ யோகேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் கஞ்சிவாத்தல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
