• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முருகன் கோவிலில் பால் வழங்கும் திட்டம்..,

ByKalamegam Viswanathan

Jun 2, 2025

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் அறிவிப்பின்படி,
சட்டமன்ற அறிவிப்பு 2025-2026 அறிவிப்பு எண் 8-ன் படி மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகளின் அதாவது கோவிலுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டமானது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் தொடர்ந்து திருக்கோவில் கம்பத்தடி மண்டபத்தில் காலை மாலை என ஏழு லிட்டர் பால் காய்ச்சப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவில் சார்பில் பால் வழங்கப்பட உள்ளது.

கோவிலில் தற்போது குடமுழுக்குக்கான பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமான ஒரு இடத்தில் பால் வினியோக்கப்படுவதாகவும் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் நிரந்தரமான இடத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இத்திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் மட்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.