விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் படம் ‘லிகர்’. ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய பொருட்செலவில்
உருவாகிவருகிறது.

இந்த படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அயர்ன் மைக் என்ற வேடத்தில் மைக் டைசன் நடிக்கிறார். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும். அதிரடி ஆக்ஷனாக உருவாகும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.