• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

யாதவர் கல்லூரியில் நுண்ணுயிரியல் கருத்தரங்கம்.,

ByM.S.karthik

Sep 11, 2025

மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையின் சார்பில் “Probiotic characterization of Bacterial isolates from Estuarine Fish Gut microbiota” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இளம் அறிவியல் நுண்ணுயிரியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி பி. பூமிகா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் செ. ராஜீ அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் திரு. சி. ஜெயராமன், கல்லூரிச் செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், கல்லூரி சுயநிதிப் பிரிவு இயக்குனர் முனைவர் அ. இராசகோபால் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

இந்நிகழ்வில் கே.பி.எஸ். கண்ணன், நிறுவனர், பார்க் பிளாசா குழுமம் (மதுரை மற்றும் சென்னை) சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக முனைவர் எஸ். சங்கரலிங்கம், இணை பேராசிரியர், தாவரவியல் துறை, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, பெருங்குடி, மதுரை கலந்து கொண்டு கூறுகையில் நல நுண்ணுயிரிகள் (Probiotics) பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தையும் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, மீன்களின் குடலில் காணப்படும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்பதை வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, மூன்றாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி கே. ரூபீனி நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வினை நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் முனைவர் க. செந்தீஸ் கண்ணன், ஜெ. ஜபீன், ஆர். கண்ணன், கே. சதீஷ்குமார், ஆய்வக உதவியாளர் எம். பாண்டி மீனா மற்றும் மாணவர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.