• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருநகரில் பெண்களுக்கான நுண் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்..,

ByKalamegam Viswanathan

Nov 18, 2023

தொழில் மேம்பாட்டு பயிற்ச்சி பெற்றவர்களுக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

மதுரை மாவட்டம், திருநகரில் பெண் தொழில் முனைவதற்கான நுண் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. பெண்களுக்கான பயிற்சி முகாமை பெட் கிராப்ட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை தாங்கினார். பெட் கிராப்ட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்புரை கூறினார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பெண் தொழில் முனைவதற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா பலராமன் 94வது மாமன்ற உறுப்பினர் சுவேதா சத்தியன். ஸ்வீட் தொண்டு நிறுவன கோவிந்தராஜன் மற்றும் பயிற்சியாளர் மார்டின் லூதர் கிங், திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
30 நாள் நடைபெற்ற பயிற்சியில் பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் , சிறுதானிய உணவுகள் மூலம் மேம்படுத்தப்பட்ட உணவு தயார் செய்வது.

தயார் செய்த பொருட்களை சந்தை மூலம் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கான ஆலோசனை வழங்கப்பட்டது. பயிற்சி முகாமில் பங்கு பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வழங்கினார்.