• Sat. Feb 7th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்!…

Byமதி

Oct 23, 2021

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 13,477 கனஅடியில் இருந்து 39,634 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் 97.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 62.02 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 550 கனஅடியாகவும் உள்ளது.