• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மெட்ரோ நாயகனின் வெள்ளை மனசு..!

Byகாயத்ரி

Feb 4, 2022

நேபாளத்தில் பிப்ரவரி 2 ஆவது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் என்னும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்க தேவையான செலவுகளை மெட்ரோ படத்தின் புகழ் நடிகரான ஷிரிஷ் ஏற்றுள்ளார்.

மெட்ரோ படத்தில் நடித்த ஷிரிஷின் திறமையை அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்த நிலையில் இவர் நேபாளத்தில் பிப்ரவரி 2வது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் சர்வதேச சாம்பியன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, 11 மற்றும் 8 ஆம் வகுப்பு படித்து வரும் இந்த 2 குழந்தைகளின் திறமையை பற்றி தனது நண்பர் மூலம் அறிந்தேன் என்று கூறியுள்ளார்.இவர்கள் தேசிய மற்றும் மாவட்ட அளவில் பல பட்டங்களை வென்றதையும் நான் அவர் மூலம் அறிந்தேன் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் இவர்களால் நேபாளத்தில் நடக்கும் யூத் கேம்ஸ் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியாமல் இருந்துள்ளது. இதனை அறிந்து அவரக்ள் பங்கேற்க தேவையான அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்ள முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.