கால்பந்து விளையாட்டில், ரொனால்டோவை விட அதிக கோல்கள் அடித்து, பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார் மெஸ்ஸி.
கால்பந்து விளையாட்டில் பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி இதுவரையில் 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர். ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கால்பந்து விளையாட்டின் வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி அர்ஜென்டினாவின் வீரர் மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இன்டர்மியாமி மற்றும் என்.ஒய் ரெட் புல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மெஸ்ஸி 2 கோல்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
மெஸ்ஸி கிளப் போட்டிகளில் இன்டர்மியாமி அணிக்காகவும், ரொனால்டோ அல் நசர் அணிக்காகவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து விளையாட்டில் ரொனால்டாவைப் பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி சாதனை
