• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி – விசாரணைக்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Byகாயத்ரி

Jan 10, 2022

கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நிலவியதாக புகார் கூறப்பட்டது. பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பஞ்சாப் அரசும், மத்திய அரசு தனித் தனியாக விசாரணை குழுக்களை அமைத்தன.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கும், பஞ்சாப் அரசுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் பிரதமர் பாதுகாப்பு குளறுபடி வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசு அமைத்துள்ள விசாரணை குழு இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் பாதுகாப்பு குளறுபடி பிரச்சினையை விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயேட்சையான விசாரணை குழுவை அமைக்கவும், இந்த குழுவில் சண்டிகர் டிஜிபி , தேசிய புலனாய்வு முகமையின் ஐஜி , பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் மற்றும் பஞ்சாப் ஏடிஜிபி ஆகியோரை சேர்க்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய, பஞ்சாப் அரசுகள் விசாரணை நடத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.