கள்ள சந்தையில் ஓடும் கூலிப்படை டிக்கெட். 3000 ரூபாய்க்கு பாக்ஸ் சீட் டிக்கெட் விற்பனைக்கு பேரம் பேசும் இடைத்தரகர். திரையரங்கு ஊழியர்களுடன் நடைபெறும் கள்ள சந்தை.
ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அடுத்த குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் கள்ள சந்தையில் கூலி திரைப்படத்தின் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
190 ரூபாய் விலையுள்ள டிக்கெட் அனைத்தும் தற்போது 3000 ரூபாய் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு திரை அரங்கின் ஊழியர் மற்றும் மேலாளரும் உடந்தையாக இருக்கின்றனர்.