• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி  உயிரிழப்பு

சேலம் எருமாபாளையம் அருகே  டாஸ்மாக் கடையில் மது வாங்கிய கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து  உயிரிழப்பு.

சேலம் களரம்பட்டி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அங்கப்பன் கூலி வேலை செய்து வருகிறார்.  தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் மது பிரியரான அங்கப்பன்  மது பானம் வாங்குவதற்காக எருமாபாளையம் ஒன்பதாம் பாலி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்ற அவர் டாஸ்மாக் கடையின் முன்பு உள்ள தடுப்பு கம்பி வலையில் மின்சாரம் பாய்ந்தது தெரியாமல் கை வைத்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு  தகவல்  தெரிவிக்கப்பட்ட அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 டாஸ்மாக் கடையின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட அதிக மின் அழுத்தம் காரணமாக டாஸ்மாக் கடை முழுவதும் மின்சாரம்  பாய்ந்து உள்ளது. இது தெரியாமல் கடையின் முன்புறம் உள்ள கம்பி  வலையை கூலித் தொழிலாளி தொட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அன்னதானப்பட்டி போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.