• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே., 50ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

கம்பம் எம்.பி.எம் பள்ளியில் 1974&75 ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப்பின், ஒன்று சேர்ந்த ஞாபகம் வருதே…. ஞாபகம் வருதே… நிகழ்ச்சி நடைபெற்றது.

கம்பம் எம்.பி.எம் (கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி) பள்ளியில் 1974&75 ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப்பின், ஒன்றிணைந்து தங்கள் பசுமை நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் “ஞாபகம் வருதே…. ஞாபகம் வருதே” நிகழ்ச்சி நேற்று கம்பத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக கடந்த, 1974&75 ஆம் ஆண்டில், இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து, உள்ளூரிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் பல்வேறு துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர்கள் ஒன்றிணைந்தனர். நிகழ்ச்சியை
முன்னாள் மாணவர் ஓய்வு ஆசிரியர் நரசிம்மன் தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவர்கள் ஓய்வு ஆசிரியர் முருகானந்தம், முருக பூபதி, நாகேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

முன்னதாக மறைந்த தங்களது ஆசிரியர்களுக்கும், சக மாணவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், 50 ஆண்டுகளுக்குப்பிறகு இப்படி ஒருநிகழ்ச்சி நடந்தது எங்கள் கடந்த காலத்தை நினைவூட்டியதோடு அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இது இத்தோடு நின்று விடாமல் என்றும் தொடர முயற்சி செய்வோம் என்றனர்.