தேனி மாவட்டம் கம்பம் நகரமன்றத்தின் சாதாரண கூட்டம், கூட்டவளாகத்தில் தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் உமாசங்கர், பொறியாளர் அய்யனார், மேலாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.
உறுப்பினர் சாதிக் – எனது பாட்டில் தார் சாலைகள் போட வேண்டி உள்ளது கழிவுநீர் வடிகால் வசதிகள் அமைக்க வேண்டி உள்ளது மக்கள் வசதிக்காக உடனடியாக செய்து தர வேண்டும். உதவிபொறியாளர் சந்தோஷ் – சாக்கடை கால்வாய் பணிகள் மற்றும் தாருரோடு பணிகளுக்கு 10 கோடி ரூபாய் அரசிடம் நிதி கேட்டுள்ளோம். நிதி வந்தவுடன் வடிகால் வசதி அமைத்து தரப்படும்.
பார்சி – தலைவர் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை கம்பம் நகரில் தண்ணீருக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது ஆனால் கடந்த சில நாட்களாக எங்கள் பகுதிக்கு ஆறு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது இது சரி செய்யப்பட வேண்டும்
தலைவர்- இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
சாதிக்- வளர்ந்து வரும் கம்பம் நகராட்சியில் மாலை நேரங்களில் முக்கியமான வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அந்தந்த பகுதிகளை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும்
பொறியாளர் – இதுகுறித்து ஆலோசனை செய்யப்படும்
சம்பத் – குடிதண்ணீர் சப்ளை நேரத்தை அதிகரிக்க வேண்டும்
தலைவர்- அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்
செந்தில் – எனது வார்டு பார்க் ரோட்டில் கழிவுநீர் செல்லும் ஓடைக்கு மேல் புதிய பாலம் கட்டுகிறார்கள்.
அந்த சாக்கடையை தூர்வாரி தண்ணீர் நிற்காமல் வெளியேற வகை செய்ய வேண்டும்.
முருகன்- கம்பம் திருவள்ளுவர் காலனி டிடிவி நகர் பகுதியில் குப்பைகள் குப்பைகளை அகற்ற வேண்டும்.
சுகாதார அலுவலர்- வார்டு தோறும் குப்பைகள் தினமும் அகற்றப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதிக்- கம்பம் நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு வரிவிதிப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதைக் குறைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


கூட்டத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ 265 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு செல்லும் பகுதியில் இடையூறாக உள்ள மின் மாற்றியை மாற்றி அமைப்பது, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கொசு புழுக்களை அழிப்பதற்கு தேவையான மருந்து அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் வாங்குவது, ரூபாய் 8 லட்சத்தில் புகை தெளிப்பான் இயந்திரம் வாங்குவது, சேதமடைந்த நகராட்சி எரிவாயு தகன மையத்தின் புகைப் போக்கியை சரி செய்வது, ஏகூத்து சாலையில் சிறு பாலம் அமைப்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சிகள் நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர் அரசகுமார், உதவி பொறியாளர் சந்தோஷ், நகரமைப்பு அலுவலர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
