• Sun. May 5th, 2024

மீனாட்சி மிஷன் மருத்துவமனை – எதிர்காலத்தில் மருந்துகளை பயன்படுத்தும் அவசியத்தை நீக்கி சாதனை..,

Byகுமார்

Feb 27, 2024

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிதான, அட்ரீனல் அகற்றிய தனித்துவமான லேப்ராஸ் கோப்பிக் அறுவை சிகிச்சை, சுரப்பி கட்டிகளை அகற்றிய லேப்ராஸ் கோப்பிக் அறுவை சிகிச்சை முறை – எதிர்காலத்தில் மருந்துகளை பயன்படுத்தும் அவசியத்தை நீக்கி சாதனை..,

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ஒரு பெண்மணியின் இரு அட்ரீனல் சுரப்பிகளிலும் புற்றுகட்டிகள் ஏற்படும் ஒரு அரிதான பாதிப்பிற்கு இருந்துள்ளார். இப்பாதிப்பிலிருந்து தீர்வு காண மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக cortical-sparing adrenalectomy‬‎ அழைக்கப்படும் ஒரு தனித்துவமான லேப்ராஸ்கோப்பிக் மருத்துவ செயல்முறையின் மூலம் வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. காட்ரிசால் என அழைக்கப்படும் ஒரு அத்தியாவசிய ஹார்மோனை தயாரிப்பதற்கு பொறுப்பான சுரப்பியின் ஒரு பகுதியான கார்டெக்ஸ் -ஐ இந்த அறுவைசிகிச்சை அகற்றாமல் அப்படியே தக்கவைத்துக் கொண்டிருப்பதால், இந்த இளம் நோயாளி வாழ்நாள் முழுவதும் மருந்துகளை சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இனிமேல் இருக்காது.

மனித உடலில் சிறுநீரகங்களுக்கு மேலே இரு அட்ரீனல் சுரப்பிகள் அமைந்துள்ளன. கார்ட்டிசால், ஆல்ட்டோஸ்டெரோன் மற்றும் அட்ரீனலின் ஆகிய ஹாரமோன்களை இச்சுரப்பிகளே உற்பத்தி செய்கின்றன. வளர்சிதை மாற்றம், இரத்த அழுத்தத்தை சீராக்கி ஒழுங்குபடுத்துவதில் இந்த ஹார்மோன்களே முக்கிய பங்காற்றுகின்றன. Pheochromocytoma என்பது, அட்ரீனல் சுரப்பிகளில் உருவாகின்ற ஒரு அரிதான புற்றுக்கட்டி இருபுற சுரப்பிகளிலும் இத்தகைய கட்டி உருவாவது இன்னும் அரிதானது. Pheochromocytoma காணப்படும் நோயாளிகளில் 10% நபர்களுக்கு மட்டுமே இருபுற புற்றுக்கட்டி உருவாகிறது. இதுகுறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன்,இந்த அறுவைசிகிச்சை குறித்து கூறுகையில் மிக அரிதான இந்த அறுவைசிகிச்சை சாதனையை செய்ததற்காக திறன்மிக்க எமது மருத்துவக் குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன் நுட்பமான அறுவைசிகிச்சை செயல்உத்தியை கடைப்பிடித்ததனால் ஸ்டீராய்டு மருந்துகளின் மீது வாழ்நாள் முழுவதும் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து இந்நோயாளியை எமது மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கின்றனர் சிக்கலான பாதிப்புகளை சமாளித்து நோயாளிகள் குணம்பெறச் செய்வதில் மேம்பட்ட அறுவைசிகிச்சை உத்திகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையே நேர்த்தியான ஒத்துழைப்பு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வெற்றிகரமான இந்த மருத்துவ சிகிச்சை விளைவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையும், தரமான வாழ்க்கைத்தரமும் கிடைப்பதை இத்தகைய அம்சங்களே உறுதி செய்கின்றன.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் ஜெகதேஷ் சந்திர போஸ் முதுநிலை நிபுணர் எடைக்குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *