• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் வைகை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலை..!

Byவிஷா

Oct 30, 2021

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் வைகை ஆற்றில் மூன்று அடி மீனாட்சி அம்மன் சிலை கண்கெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் மூன்று அடி மீனாட்சி அம்மன் சிலை கண்கெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைகை ஆற்று பகுதியை சேர்ந்தவர் தங்கமணி மற்றும் பூசாரி கல்யாணசுந்தரம், முருகன் ஆகியோர் தடுப்பணை படித்துறையில் குளித்தபோது ஆற்றில் கையில் கிளி, பீடத்துடன் இருந்த மீனாட்சி அம்மன் கற்சிலையை எடுத்துள்ளனர். இதன் பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி அதனை அப்பகுதியை சேர்ந்த விஏஓ ஜெயப்பிரகாஷ் மூலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மீனாட்சி அம்மன் சிலையை பார்ப்பதற்காக கிராம மக்கள் அதிகளவு வந்திருந்தனர். இந்த சிலையை கோயிலில் இருந்து கடத்தி வந்து ஆற்றங்கரையில் வீசியிருக்கலாம் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.