மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளுக்காக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் திட்டம் துவக்க விழா அலங்காநல்லூில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோர் காலை 9 மணிக்கு தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வரவேண்டிய அமைச்சர் மூர்த்தி மதியம் ஒரு மணி வரை வராத நிலையில் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிதாய்மார்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையில் காத்திருந்த அவலம் ஏற்பட்டது

காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த வெங்கடேசன் எம்எல்ஏ அமைச்சர் வர தாமதமாகும் என்பதால் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வருவதாக அதிகாரிகள் மற்றும் கட்சியினரிடம் கூறி சென்று விட்டார்
இந்த நிலையில் அதிகாரிகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முடியாமல் செய்வதறியாது திகைத்தனர்
இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கர்ப்பிணிகளுக்கான கிப்ட் பாக்ஸ் வாங்குவதற்காக வந்திருந்த கர்ப்பிணி தாய்மார்கள் 30க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் காத்திருந்தனர்

அமைச்சர் வர முடியாத சூழ்நிலையில் தொகுதி எம்எல்ஏ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு கிப்ட் பாக்ஸ் வழங்கி இருக்கலாம் அல்லது கர்ப்பிணி பெண்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே வருகை தந்து மற்ற நிகழ்ச்சியை அதன் பிறகு அமைச்சர் மூர்த்தி வைத்திருக்கலாம் அதை விடுத்து கர்ப்பிணி தாய்மார்களை காக்க வைத்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் வயதானவர்களும் மருத்துவ முகாமில் எந்த இடத்தில் எந்த நோய்க்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியாமல் ஆங்காங்கே அலைந்து திரிந்தது இந்த முகாமின் நோக்கம் நிறைவேறுமா என பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும் கூட்டத்தைக் கூட்டுவதற்காக அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யங்கோட்டை தனுச்சியம் தெத்தூர் மேட்டுப்பட்டி கொழிஞ்சி பட்டி மாணிக்கம் பட்டி சரந்தாங்கி பாரப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் இருந்து சுமார் 1000ற்கும் மேற்பட்ட 100 நாள் வேலை பார்க்கும் பொது மக்களை டாட்டா ஏசி உள்ளிட்ட கனரக வாகனங்களில் ஆபத்தான முறையில் அதிகாரிகள் அழைத்து வந்தது மருத்துவ முகாமின் நோக்கத்தை சிதைப்பதாக இருந்தது.

மருத்துவ முகாமிற்கு வந்த 100 நாள் பணியாளர்கள் மருத்துவ அட்டைகளை பதிந்து விட்டு உடனடியாக 100 நாள் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் .அப்போதுதான் இன்றைக்கு சம்பளத்தை ஏற்றுவார்கள் என கூறியது வேதனையிலும் வேதனையாக இருந்தது.
மேலும் மருத்துவ முகாமிற்கு வந்த வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரிகள் எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும் செய்யாததால் பரிசோதனை செய்ய முடியாமலும் மருத்துவ முகாமில் பெயரை பதிய முடியாமலும் ஆங்காங்கே அலைந்து திரிந்தனர்.
இந்த நிலையில் மருத்துவ முகாமில் பொதுமக்கள் மற்றும் வயதானவர்களுக்கு எந்த ஒரு முன்னேற்பாடு வசதிகளும் செய்யாததால் கடும் வெயிலில் வரிசையில் காத்திருந்தனர் மருத்துவ துறை சார்பில் முறையான ஏற்பாடுகள் மற்றும் போதிய ஆட்களை நியமிக்காததால் பொதுமக்களுக்கு மருத்துவ முகாமின் எந்த ஒரு திட்டமும் சென்று சேராத நிலையே ஏற்பட்டது.
இது குறித்து அங்கிருந்து அதிகாரிகள் கூறுகையில் அரசு எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் இது போன்ற திட்டத்தை செயல்படுவதால் பொதுமக்களிடம் அரசுக்கு கெட்ட பெயர்தாங ஏற்படுகிறது. 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து பொதுமக்களை இங்கு வரவழைப்பதற்கு பதில் அந்தந்த ஊராட்சிகளில் மருத்துவ முகாம்களை நடத்தினால் அது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறினர்.
ஐந்து கிலோமீட்டர் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ள கிராமங்களில் இருந்து மருத்துவ முகாமிற்கு வயதானவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு வருவார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருந்தது.
ஒரு வழியாக நான்கு மணி நேரம் தாமதமாக சுமார் ஒரு மணி அளவில் முகாமிற்கு வந்த அமைச்சர் மூர்த்தி 10 நிமிடத்தில் மூன்று நபர்களுக்கு மட்டும் கிப்ட் பாக்ஸ் மற்றும் நலத்திட்டங்களை வழங்கி விட்டு உடனடியாக புறப்பட்டு சென்றார். இதுவும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
முறையான ஏற்பாடுகளை செய்யாததால் மருத்துவ முகாமிற்கு வந்த பொதுமக்கள் அரசை கடுமையாக வசைப்பாடி சென்றனர்.
இனிமேலாவது அரசு போதிய முன்னேற்பாடுகளை செய்து பொதுமக்கள் சிரமப்படாத அளவில் முகாம்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.