• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து நடத்திய மருத்துவ & இரத்ததான முகாம்!!

Byஜெ.துரை

Mar 22, 2024

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் வேலை வாய்ப்பு, சுயதொழில் வழிகாட்டுதல்,கல்வி,மருத்துவம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல், மற்றும் பேரிடர் காலத்தில் மக்களுக்கு பல உதவிகளை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

இந் நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்,நர்சிங் ஸ்டேஷன் ஹோம் நர்சிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆம்பெனோல் ஓம்னிகனெக்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்து மார்ச்-20,21 ஆகிய இரண்டு நாட்கள் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மறைமலை நகர்பகுதியில் நடைபெற்றது.

இந்த முகாமில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட நபர்கள் இரத்த தானம் வழங்கினர்.

மேலும் இந் நிகழ்வில் சென்னை இந்திராகாந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை இரத்த வங்கிகளும் பங்கு பெற்று பெற்றனர்.

இந்த முகாமில் பங்கு பெற்று தன்னை இணைத்து கொண்டு குருதி கொடை அளித்த கொடையாளர்கள், தன்னார் வலர்களுக்கும் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்,நர்சிங் ஸ்டேஷன் ஹோம் நர்சிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆம்பெனோல் ஓம்னிகனெக்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியோர்கள் இணைந்து தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.