• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அம்மை தழும்பு… அரிப்பு தழும்பு … கரும்புள்ளிகள் மறைய

ByMalathi kumanan

Dec 1, 2022

தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் வகுடுகள் மறைய ஒரு கைப்பிடி முருங்கை இலை எடுத்து அவற்றை நன்றாக அரைத்து அந்த தழும்பு வகுடு மேல் பூச வேண்டும் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அதனை கழிவு விடவும் இதுபோன்று வாரம் இரு முறை செய்து கொண்டே வந்தால் கரும்புள்ளிகளும் அம்மை தழும்புகளோ இருக்காது

  1. சிறிது கசகசா ஒரு துண்டு மஞ்சள் கருவேப்பிலை விட்டமின் ஈ ஆயில் இவற்றை நன்கு கலந்து மைய அரைத்து தழும்புகள் மேல் போட்டால் அதன் வகுடுகள் நீங்கி முகம் மினுமினுக்கும்
  2. குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வர தழும்புகள் மறையும் தேவையற்ற முடிகள் உதிரும்
  3. தேங்காய் எண்ணெய் சிறிது விட்டமின் ஈ ஆயில் மஞ்சள் கசகசா வெற்றிலை நன்கு அரைத்து பேஸ்ட் போல் இருக்கும் அதனை நம் முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் வகுடுகள் நீங்கும் இதனை வாரம் இரு முறை செய்தால் முகம் அழகாகும்
  4. ஓசை மிதமான சுடுநீரில் கலந்து கொள்ளவும் இந்த பேஸ்ட்டை சூடு ஆறியதும் முகத்தில் அப்ளை செய்து தழும்புகள் உள்ள இடத்தில் நன்கு மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை மிதமான சுடுநீரில் கழுவி விட வேண்டும்
  5. முகத்தில் அரிப்பு உண்டாவதை தடுக்க அரிப்பதினால் ஏற்படும் தழும்புகளை நீக்க சிறிது நேரில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ள வேண்டும் இது பேஸ்ட் ஆக வரும் வரை நன்றாக கலந்து முகங்களில் தழும்புகளில் தடவ வேண்டும் பின்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும் பிறகு முகம் வகுடுகள் நீங்கி அரிப்பில்லாமல் இருக்கும்
  6. தேங்காய் பாலுடன் சிறிது தேன் ஓட்ஸ் கடல் பாசம் இவற்றை நன்கு மைய அரைத்து வகுடுகளில் கரும்புள்ளிகளில் தடவி அழகாகும்
  7. பப்பாளி பொதுவாக செரிமானத்திற்கு உதவுகிறது இது அம்மை தழும்பை போக்கவும் உதவுகிறது பப்பாளி பழம் கரும்புச் சர்க்கரை பால் மூன்றையும் நன்றாக கலந்து கலவை முகத்தில் நன்றாக தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்
  8. தேன் பேக்கிங் சோடா இவற்றை நன்கு கலந்து தழும்பு இருக்கும் இடத்தில் இதை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும் பிறகு மெல்லிய துணியை வெந்நீரில் நனைத்து அதன் மேல் போர்த்தி பிறகு சுத்தம் செய்யவும் வாரம் இரண்டு முறை செய்யலாம்
  9. நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது பால் சந்தனம் அரிசி மாவு இரண்டு சொட்டு எலுமிச்சம் சாறு தேன் இவற்றை நன்கு குழைத்து முகத்தில் தடவி சிறிது மசாஜ் கொடுத்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி பின் தக்காளியை முகத்தில் தடவி வர முகம் மினுமினுப்பாகும் இது 15 நாளுக்கு ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும்
    இதை செய்தால் அம்மை தழும்பு… அரிப்பு தழும்பு … கரும்புள்ளிகள் மறையும்