குமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட முகிலன் விளையில் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் மேயர் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000.00 வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று (08.01.2026) காணொலி காட்சி வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை தொடர்ந்து, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் .மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., தலைமையில், இன்று (08.01.2026) காலை 10 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட முகிலன்விளை நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கவுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்,துணை மேயர், தமிழக உணவுக்கழகத்தலைவர் சுரேஷ் ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.




