குமரியில் குருவாயூர் என அழைக்கப்படும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமர்சியாக துவங்கியது. இதில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், இணை ஆணையர் பழனி குமார் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் ஹரிபத்மநாபன், ஆனந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.





