• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கொசு ஒழிப்பு மருந்து இயந்திரங்களை , மேயர் இந்திராணி பொன்வசந்த் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்…

ByKalamegam Viswanathan

Dec 14, 2023
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் டெங்கு தடுப்பு பணிக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்களை,
மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் லி.மதுபாலன் ஆகியோர் இன்று (14.12.2023) கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணி மேற்கொள்ள பணியாளர்கள் பணியாளர்களை கொண்டு டெங்கு கொசு புழு உருவாகுவதை தடுக்கும் பொருட்டு வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் கொசுப்புழு உருவாகும் பகுதிகளை கண்டறிந்து கொசு புகை பரப்பும் பணி மற்றும் மருந்து தெளிக்கும் பணி, கொசு மருந்து புகை அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் அனைத்து வார்டு பகுதிகளிலும் நிலையான பயணத் திட்டத்தின் படி அதற்கென பணியாளர்களை ஒதுக்கீடு செய்து முதிர்கொசுக்களை கட்டுப்படுத்திட கொசுப்புகை மருந்து அடிக்க
பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது, வடகிழக்கு பருவமழை காரணமாகவும் குளிர்காலமாக இருப்பதாலும் டெங்கு கொசு புழு உற்பத்தி அதிகம் ஏற்பட வாய்ப்பாக உள்ளது. இதனால் பொது மக்களுக்கு அதிகளவில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்தும் பொருட்டு போதிய அளவில் கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் பொது சுகாதார அத்தியாவசிய அவசியம் கருதி பணி மேற்கொள்ள ரூ.44.18 லட்சம் மதிப்பீட்டில் 25 எண்ணம் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் 4 எண்ணம் வாகனம் மூலம் கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்டுள்ள கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்களை மேயர், ஆணையாளர், ஆகியோர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து இயந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்கள. இந்நிகழ்வில், மண்டலத்தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, வாசுகி, முகேஷ்சர்மா, சுவிதா, சுகாதாரக்குழு தலைவர் ஜெயராஜ், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், சுகாதார அலுவலர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.