• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

திருமங்கலத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர் இல்லத்திற்கு, மதுரை ஆட்சியர் நேரில் திடீர் ஆய்வு…

ByKalamegam Viswanathan

Dec 14, 2023
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தெருவில்,  புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவரின் இல்லத்திற்கு, மதுரை ஆட்சியர் சங்கீதா நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருமங்கலம் முஸ்லிம் தெருவை சேர்ந்த அனிஷா முகமது உமர் ரஃபிக் என்பவர் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், அவரது இல்லத்திற்கு, மதுரை ஆட்சியர் சங்கீதா, வருவாய் கோட்டாட்சியர் சாந்தி , தாசில்தார் மனேஷ் குமார் ஆகியோர் திடீரென அவரது இல்லத்திற்கு சென்று புதிய வாக்காளர் சேர்க்கைக்கான ஆவணங்களை சரிபார்த்து ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.