புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் செந்தில் குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அறந்தாங்கி சாலை மற்றும் பாலங்கள் உதவி பொறியாளர் விஜயகுமார் மற்றும் திருவராங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நல தேவன் ஆகிய அரச கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நாட்கள் அதிகப்படுத்த வேண்டும் மேலும் வம்பன் காலணி குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யவும் சுடுகாடு ரோடு தார்சாலை சமத்துவபுரம் மயாணம்சாலை தார்சாலை அமைத்தல் மின் விளக்கு வட்டாடெங்க பாராமரிப்பு பணிகளை உடனே நிறைவேற்றித் தருமாறு பொதுமக்கள் கூறினார்கள்.
இதனை ஏற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தீர்மானத்தை உடனே நிறைவேற்றப்பட்டது. மேலும் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்க்கு நன்றியை தெரிவித்தனர். கிராம சபை கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் அதிகமாக கலந்து கொண்டனர். கிராம கூட்டத்தில் இறுதியில் நன்றியுரை ஊராட்சி செயலாளர் கணேசன் கூறினார்.