• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை – தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்…

BySeenu

Nov 20, 2023

கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை கண்டித்து முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அக்கட்சியின்கோவை மண்டல செயலாளர் பிரின்ஸ் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் படுகொலை சம்பவத்தில் ஈடுபடும் கூலிப்படையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய பிரின்ஸ் சுந்தர், குறிப்பிட்ட சாதியனரை தொடர்ந்து படுகொலை செய்யும் கும்பலை கண்டித்து தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். தென் மாவட்ட மட்டுமல்லாமல் மற்ற இடங்களில் நடக்கும் படுகொலையை கண்டித்தும்,தேவேந்திர குல வேளாளர் ஜாதியினரை தொடர்ந்து தாக்குவதை கண்டித்தும்,இதன் மூலம் தமிழக அரசின் காவல்துறை முழு கவனம் செலுத்தி கொலைகளை தடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக தெரிவித்தார்.