• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஒரே தேதியில் மோத வரும் மாஸ் படங்கள்

Byகாயத்ரி

Jan 8, 2022

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியிட்ட போஸ்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். அநேகமாக தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் ஆக ஏப்ரில் 14ம் தேதி தான் பீஸ்ட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் தற்போது அதே தேதியில் கேஜிஎப் 2 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கேஜிஎப் முதல் பாகம் தமிழிலும் மிக பிரம்மாண்ட ஹிட் என்பதால் அதன் மீது அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.யாஷ் உடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கேஜிஎப் 2ல் நடித்து இருப்பதால் ஹிந்தியில் கூட படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனால் பீஸ்ட் பட வசூலுக்கு கேஜிஎப் 2ஆல் ஓரளவு பாதிப்பு நிச்சயம் இருக்கும் என தெரிகிறது.