• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கரூரில் தென் திருப்பதியில் மாசி மாத தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழா

ByAnandakumar

Mar 12, 2025

கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இன்று திருத்தேர் நிகழ்ச்சி சிறப்பாக துவங்கியது.அதிகாலை சுவாமி கல்யாணவெங்கட்ரமணர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் தேருக்கு வந்தடைந்தார் அதன் பின்னர் இன்று காலை மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கங்கணம் கட்டி ஆலயத்தின் பட்டாச்சாரியக்கு மாலை அணிவித்து மாசி மாத தேரோட்டம் சிறப்பாக துவங்கியது.

பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும் மாசி மாத திருத்தேரோட்டம் நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் அருகில் உள்ள ஊர்களிலிருந்து ஏராளமான ஆன்மீகப் பெருமக்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.தேரோட்டத்தை முன்னிட்டு தான்தோன்றி மலை போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.