• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கழுதைகளுக்கு திருமணம்… கொட்டித் தீர்த்த மழை… உண்மைதானோ..

Byகாயத்ரி

Jun 28, 2022

விஜயநகர் மாவட்டத்தில், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சிறிது நேரத்தில் மழை பெய்த சம்பவம் நடந்துள்ளது.

வடக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, பெய்து வருகிறது. ஆனால், விஜயநகர் மாவட்டத்தில் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.
இதனால், அரப்பனஹள்ளி தாலுகா கோனகேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று மழை வேண்டி 2 கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து இந்த திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, 2 கழுதைகளுக்கும் புத்தாடை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் கழுதைகளை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது, திடீரென கிராமத்தில் மழை பெய்தது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.