• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருமணம் நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Mar 29, 2023

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மதுரை கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது.


மதுரை மாவட்டம் அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் மண்டலம் 5ன் தலைவர் சுவிதா விமல் மற்றும் கவுன்சிலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலையில் கோயில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் அலுவலர்கள் சதிஸ், காளிஸ்வரன் அர்ச்சகர் நாகசுப்பிரமணியன் அவனியாபுரத்தை சேர்ந்த பிரபு – முத்துமாரிக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர்.
அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக ரூபாய் 50 ஆயிரம் மதிப்பில் கல்யாண சீர்வரிசை பாத்திரங்கள் வழங்கப்பட்டது.