விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் (01.05.2025)இன்று துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு பால், தயிர், நெய் மஞ்சள் போன்ற 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது .கொடி மரத்திற்கு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாத வழங்கப்பட்டது. இன்று உழைப்பாளர் தினம் என்பதால் விடுமுறை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் விழா கொண்டாடுவது வழக்கம் மாரியம்மன் பொட்டி பல்லாக்கு . பூத வாகனம். பூ சப்பரம் கண்ணாடி சப்பரம் உள்ளிட்ட பல்வேறு சப்பரங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
திருவிழா முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வருகின்ற 10ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த பூக்குழி திருவிழாவில் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திகடனை நிறைவேற்றுவார்கள் விழா ஏற்பாடுகளை திருக்கோவில் விழா கமிட்டி செய்திருந்தனர்.