சுவாமி விவேகானந்தரின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இன்னொரு பிரிவான புத்தா சம்ஸ்கார் கேந்திரம் மற்றும் கிரீடா பாரதி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முன்புறம் இருந்து தொடங்கியது.

பழைய பேருந்து நிலையம், கீழ ராஜவீதி வடக ராஜ வீதி திலகர் புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் மன்னர்கள் ஊரில் விளையாட்டு திடலை வந்து அடையும் வகையில் ஐந்து கிலோ மீட்டருக்கு இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஓட்டப்பந்தய வீரர்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் சிறுவர் சிறுமியர் இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் காவல்துறையினரும் சேர்ந்து கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொழிலதிபர் முத்துப்பட்டினம் பால சண்முகம் ராமச்சந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்தார்.

புத்த சம்ஸ்கார்ட் கேந்திரம் அமைப்பின் கௌரவ தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் வழக்கறிஞர் ஜீவானந்தம் அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் வைரவ சுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தினர். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இளைஞர்களுக்கு வர வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடந்த இந்த மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.







