• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சென்னையில தண்ணியில மிதக்கணும்-னு பாடல் பாடி படகோட்டி வரும் மன்சூர் அலி கான்

Byகாயத்ரி

Nov 27, 2021

தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வசிக்கும் வீடு அருகேயும் மழை நீர் அதிகம் தேங்கி உள்ளது. இதையடுத்து அவர், ஒரு பெட்டியை படகுபோல் பயன்படுத்தி, அதில் அமர்ந்தவாறு பாட்டு பாடிக் கொண்டே செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

‘தமிழ்நாட்டில பொறக்கணும்
சென்னையில தண்ணியில மிதக்கணும்
பொறந்தா தமிழனாக பொறக்கணும்
சென்னையில காரு ஓட்டி மகிழணும்’

என்று பாடிக் கொண்டே படகில் செல்லும் மன்சூர் அலிகான், ‘தமிழ்நாட்டில் உள்ள காவிரி பாலாறு தேனாறு எல்லா ஆறுகளும் சென்னையில் தான் ஓடுகிறது என்று கேலியாக பாட்டு பாடியவாறு படகில் செல்கிறார். மன்சூர் அலி கானின் இந்த வீடியோவை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.