• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மனோதங்கராஜ் பொன்னார் குற்றச்சாட்டுகளுக்கு பதில்..,

பெரும் தலைவர் காமராஜ் தேசிய பேரவை என்ற அமைப்பின் சார்பில்
கடந்த (நவம்பர்7)ம் நாள் பெரும் தலைவர் காமராஜரை உயிரோடு கொழுத்த ஜனங்கம்(பாஜகவின் முந்தைய அடையாளச் சொல்) ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பெரும் கூட்டமாக தலைவர்காமராஜர் தங்கியிருந்த இல்லத்தை தீக்கரையாக்க முயன்ற தினத்தை தந்தை பெரியார் கருப்பு தினம் என அறிவித்தார்.அந்த மோசமான தினத்தின் 60 ம் ஆண்டு நெருக்கும் நேரத்தில்.அன்றைய ஜனங்கம், ஆர்எஸ்எஸ்_யின் கொடுரமான செயலை நாட்டு மக்களுக்கு நினைவுட்டவே.

பெரும் தலைவர் காமராஜர் தேசிய பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தது, கன்னியாகுமரியில் உள்ள பெரும் தலைவர் நினைவு மண்டப காமராஜர் திருவுருவச் சிலை முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். தமிழக மக்களின் பாராட்டுகள் எங்களுக்கு கிடைத்ததை பொறுத்துக்கொள்ள முடியாது பாஜகவினர் நாடகம் ஆடுகின்றனர்.

பெரும் தலைவர் காமராஜரை உரிமை கொள்ளும் எந்த தார்மிகமும் பாஜகவிற்கு கிடையாது. பெரும் தலைவர் அவரது வாழ்நாளில் மதவாத அரசியலை
ஏற்றுக்கொண்டதே கிடையாது.

தமிழக கேரள எல்லையில் உள்ள மலையில் ஒருபக்கம் ‘காளி’மலையும், மறுபக்கம் ‘குருசு’ மலையும் உள்ளது. இருமத மக்களும் அவரவர் இடங்களில் அவர்களது வழிபா முறையை பின்பற்றும் நிலையில்.

காளி மலைக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. குருசூ மலைக்கும் மின் இணைப்பு வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததும். குருசு மலைக்கு மின் இணைப்பு கொடுக்க கூடாது என பாஜகவும் அதனுடன் சேர்ந்த இயக்கும் அமைப்புகளும் பிரச்சினை ஏற்படுத்துகிறனர்‌.

ஒருவருக்கு வயிறார உணவு கிடைத்துவிட்டது. பசியோடு இருக்கும் இன்னொருவனுக்கு
உணவு கொடுக்கவே கூடாது என்ற நிலைப்பாட்டில் பாஜகவும் அதன் ஆதரவு அமைப்புகளும் இருப்பதாக அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்கள் இடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், குளச்சல் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் தமிழக உணவு கழகத்தின் தலைவர்
சுரேஷ் ராஜான் ஆகியோர் உடனிருந்தார்கள்.