• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மேக கூட்டத்திற்குள் மஞ்சூர்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் சாரல் மழை கடுமையான மேகமூட்டம் காரணமாக வேலைக்கு செல்வோர், பள்ளி குழந்தைகள் வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வாகனத்தில் முகப்பு விளக்குகளை எரிய வைத்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பகல் நேரம் இரவு போல் காட்சி அளிப்பதால் வணிக நிறுவனங்களில் மின் விளக்குகள் எரிந்து கொண்டே இருப்பதை காண முடிகின்றன. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மழை கோட் அணிந்து கொண்டு முகத்தை மறைத்தவாரு செல்கின்றன. சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொதுமக்கள் நெருப்பு மூட்டி தீ காய்வதையும் காணமுடிகிறது.