• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் முனீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அன்று அஷ்டபந்தா மகா கும்பாபிஷேக குடமுழக்கு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.


கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு குந்தா பாலம் சிவன் கோவில் அருவியில் இருந்து 108 கங்கா தீர்த்தம் பக்தர்களால் 108 குடங்களில் எடுத்துவரப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பழமை வாய்ந்த கோவிலில் முனீஸ்வரர் புதிதாக சிலை அமைத்து முத்து மாரியம்மன் முனீஸ்வரர் மஞ்சள் பன்னீர் பால் இளநீர் சந்தனம் குங்குமம் நெய் பஞ்சாமிர்தம் தேன் அரிசி மாவு எலுமிச்சை சாறு பழச்சாறு விபூதி நெய் தயிர் துளசி தீர்த்தம் கலச தீர்த்தம் திருமஞ்சல் நல்லெண்ணெய் என 21 அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் மலர் அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை பக்தர்களின் வழிபாடு நடைபெற்றது அதை தொடர்ந்து மதியம் அன்னதானம் அதைத்தொடர்ந்து மாலை மறுபூஜையுடன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவினை கோவில் கமிட்டியினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்